by admin on | 2025-09-12 01:38 PM
*வத்தலகுண்டு அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு..!!*
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் பெண் ஜோதி (50) மின்சாரம் தாக்கி உயிரிழப்பு. வீட்டில் இரும்பு கம்பியில் ஈர துணியை காய வைத்தபோது மின்சாரம் தாக்கி ஜோதி உயிரிழந்தார். ஜோதியை காப்பாற்றச் சென்ற அவரது மகன் சவுந்தரபாண்டி(28), மகள் ராஜேஸ்வரி(30) ஆகியோரும் காயம் அடைந்தனர்.மேற்படி சம்பவம் குறித்து வத்தலகுண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
நிருபர் மாரிமுத்து திண்டுக்கல்.