by admin on | 2025-09-11 03:14 PM
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் வடகவுஞ்சிக் கிராம மலைத்தோட்ட விவசாயிகள் சங்கம் ஆயக்குடி, சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட தலைவர் R.சச்சிதானந்தம் MP தலைமையில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோரிக்கைகள்
1.கொடைக்கானல் தாலுக்கா வடகவுஞ்சிக் கிராம ஆயக்குடி எல்லையோர வருவாய்த்துறை நிலங்களில் விவசாயம் செய்து வரும் விடுபட்ட விவசாயிகளுக்கு வன உரிமை சட்டப்படி பட்டா கொடுக்க வேண்டியும்,
2.ஆயக்குடி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி ஆகிய விவசாய நிலங்களுக்கு வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரியும்,
3.பட்டா நிலங்களில் வனத்துறை அத்து மீரல்களை தடுத்து நிறுத்தகோரியும்,
4.யானைகளை சரணாலயத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிருபர் மாரிமுத்து திண்டுக்கல்.