by Vignesh Perumal on | 2025-09-11 02:17 PM
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் நடைபெற்ற "தமிழ்க் கனவு" நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டார்.
விழாவில் பங்கேற்பதற்காக வந்த அமைச்சர் கோவி.செழியனை, திண்டுக்கல் மாவட்ட தி.மு.க.வின் சார்பாக, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இந்த நிகழ்வில், கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் உரையாற்றினார். மேலும், உயர்கல்வியில் தமிழ் மொழியின் பங்கு குறித்தும் அவர் விளக்கினார்.
இந்த நிகழ்ச்சி, மாணவர்களிடையே தமிழ் மொழியின் வளமையையும், அதன் பாரம்பரிய சிறப்புகளையும் கொண்டு சேர்க்கும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.
செய்தி - பாலாஜி கதிரேசன் பழனி-திண்டுக்கல்