| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Madurai

ஒரே சிறையில் 7 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியோர் பட்டியல்...! அதிரடி உத்தரவு...!

by Vignesh Perumal on | 2025-09-11 01:22 PM

Share:


ஒரே சிறையில் 7 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியோர் பட்டியல்...! அதிரடி உத்தரவு...!

தமிழ்நாடு சிறைத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே சிறையில் பணியாற்றி வருபவர்களின் பட்டியலைத் தாக்கல் செய்யுமாறு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை சிறையில் இரண்டாம் நிலை வார்டனாகப் பணியாற்றி வரும் ரமேஷ் என்பவர், 3 ஆண்டுகளுக்குள்ளாகவே தான் பணி மாறுதல் செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பு வழக்கறிஞர், "மனுதாரர் ஒரே மாவட்டத்தின் கீழ் உள்ள சிறைகளில் தொடர்ந்து 7 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதன் காரணமாகவே அவர் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இது விதிகளுக்கு உட்பட்ட நடவடிக்கைதான்" என்று விளக்கமளித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "சிறைத் துறையில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிறையில் பணியாற்றி வருபவர்களின் பட்டியல் ஏன் தாக்கல் செய்யப்படவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.

இதை அடுத்து, தமிழ்நாடு சிறைத்துறையில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிறையில் பணிபுரிந்து வருபவர்களின் பட்டியலைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை வரும் செப்டம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.




ஆசிரியர்கள் குழு....

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment