by Vignesh Perumal on | 2025-09-10 10:53 AM
திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டி அருகே அரசுப் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இளம் பெண் மற்றும் வாலிபர் என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இன்று (செப்டம்பர் 10, 2025) திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோபால்பட்டி அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்று, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த அடையாளம் தெரியாத இளம் பெண் மற்றும் வாலிபர் இருவரும் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த கோபால்பட்டி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
காவல்துறையினர் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்தும், விபத்துக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்