by admin on | 2025-09-09 07:17 PM
கொடைக்கானல் சுற்றுலா வந்த கேரள பயணிகள் 5 பேரை ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் அறையில் வைத்து அடித்ததாக சுற்றுலா பயணிகள் புகார் கூறியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியிலிருந்து 5 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து மேல்மலை கிராமமான போலூர் கிராமத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தங்கும் விடுதி தேடியதாக கூறப்படுகிறது. கேரள சுற்றுலா பயணிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள வருவாய் நிலத்திற்கு சென்று புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து ஆனைமலை புலிகள் வனப்பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதியில் பணியாற்றும் வனத்துறையினர் 2 பேர் நீங்கள் வனப்பகுதிக்குள் சென்று உள்ளீர்கள் எனவே ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சுற்றுலா பயணிகளிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கும் வனத்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.வனத்துறையினர் 5 கேரள மாநில சுற்றுலா பயணிகளை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தனி அறையில் பூட்டி பணம் கேட்டு அடித்ததாகவும் வாகனத்தில் இருந்த ரூ.9,500 பணம் மற்றும் செல்போனை பிடுங்கி இனிமேல் வனப்பகுதிக்கு அருகாமையில் உள்ள இடங்களுக்கு வரமாட்டேன் என்று கஞ்சா, போதை காளான் உபயோகிக்க மாட்டேன். என்று எழுதி வாங்கி கேரள சுற்றுலா பயணிகளை அனுப்பி வைத்ததாக கேரள சுற்றுலா பயணிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.மேலும் வனத்துறையினர் அடித்த அடியை தாங்க முடியாமல் கோழிக்கோடு பகுதி சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் வனத்துறையினரின் அராஜகத்தை பற்றி புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளர்.
நிருபர் மாரிமுத்து திண்டுக்கல்.