by Vignesh Perumal on | 2025-09-09 02:32 PM
இந்தியாவின் அடுத்த குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (செப்டம்பர் 9, 2025) நடைபெற்றது. இத்தேர்தலில் சுயேட்சை எம்.பி.க்கள் சபர்ஜீத் சிங் கலாசா மற்றும் அம்ரித்பால் சிங் உள்ளிட்ட 14 எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை. அதாவது சுயேட்சை எம்.பி.க்களான சபர்ஜீத் சிங் கலாசா மற்றும் அம்ரித்பால் சிங் ஆகியோர் தேர்தலைப் புறக்கணித்தனர். இவர்களைத் தவிர, ஏற்கனவே பிஜு ஜனதா தளம் (BJD), பாரத் ராஷ்டிர சமிதி (BRS) மற்றும் சிரோன்மணி அகாலி தளம் (SAD) ஆகிய கட்சிகளும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தன. மொத்தமுள்ள 781 எம்.பி.க்களில், 14 எம்.பி.க்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் பலர் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர். அவர்களில், எம்.பி. சிவா, எம்.பி. தொல்.திருமாவளவன், எம்.பி. கனிமொழி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்கள் குழு......