by Vignesh Perumal on | 2025-09-08 11:48 AM
கழிவறைக்குச் செல்வதாகக் கூறி வீட்டிற்குள் நுழைந்து 11 சவரன் நகையைத் திருடியதாகக் கூறப்படும் வழக்கில், தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) மேல்புறம் ஒன்றிய இணைச் செயலாளர் அர்சிதா கைது செய்யப்பட்டுள்ளார்.
குமரி மாவட்டம், மேல்புறம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் வினித். இவர் தனது வீட்டில் இருந்த 11 சவரன் நகை காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சில நாட்களுக்கு முன்பு வினித் வீட்டிற்குச் சென்ற த.வெ.க. நிர்வாகி அர்சிதா, அவரிடம் "கழிவறைக்குச் செல்ல வேண்டும்" எனக் கூறி வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த தருணத்தைப் பயன்படுத்தி 11 சவரன் நகையைத் திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, காவல்துறையினர் அர்சிதாவைக் கைது செய்து விசாரித்தனர். விசாரணையின்போது, அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சம்பவம், த.வெ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்கள் குழு.......