by admin on | 2025-09-08 09:21 AM
திண்டுக்கல்லில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக பெரிய பள்ளம் தோண்டிய மாநகராட்சி ஆணையர், உதவி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது காவல் நிலையத்தில் புகார்*
திண்டுக்கல்லை சௌந்தரபாண்டி(21) என்பவர் ராஜலட்சுமி நகர் சித்தாராமஹால் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தார் சாலையில் எந்த ஒரு அறிவிப்பு பலகையும் இன்றி எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யாமல் நடுரோட்டில் பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் மின்விளக்கு வசதி இல்லை. விபத்து ஏற்படுத்தும் மெகா சைஸ் பள்ளம் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர் பள்ளத்தில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.
தீவிர சிகிச்சை பிரிவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எந்தவித முன் அறிவிப்பு பலகை இன்றி, எந்த ஒரு பாதுகாப்பு வசதியும் இன்றி பள்ளம் தோண்டி விபத்து ஏற்பட்டது . தொடர்பாக சௌந்தரபாண்டி என்பவர் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி பொறுப்பாளர், உதவி பொறியாளர், ஒப்பந்தக்காரர் ஆகியோர் மீது திண்டுக்கல் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
செய்தியாளர் மோகன் கணேஷ் திண்டுக்கல்.