by admin on | 2025-09-08 06:49 AM
சீட்டு விளையாட்டில் 43 பேர் கைது..!!!
பல்லடம் போலீசார் அதிரடி...!!!!
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து பல குடும்பங்கள் நடு தெருவில் நிற்கிறது. இதனால் அரசு பொதுமக்களின் நலம் கருதி பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு , தடை செய்யும் சட்டத்தை கொண்டு வந்தது.
ஆனால் அதனை மிஞ்சும் வகையில் நேரடியாக சூதாடும் சீட்டாட்ட கிளப்புகள் திருப்பூர் மாவட்டத்தில் அதிகமாக செயல்பட்டு வருகிறது. அதில் முக்கியமானது எந்த ஆட்சி வந்தாலும் தங்குதடையின்றி செயல் படும் எலைட் ரெக்கரேஷன் கிளப் என பொது மனமகிழ் மன்றம் ஆகும். திருப்பூர் பல்லடம் ரோடு வீரபாண்டி காவல் நிலையத்தின் செக் போஸ்ட் அருகில் செயல்படுகிறது. நீதிமன்ற அனுமதி பெற்றுக்கொண்டு உறுப்பினர் மட்டுமே விளையாட வேண்டும் என்பது விதி . ஆனால் இங்கு பணம் வைத்து சூதாடும் கிளப் ஆக செயல்பட்டது.
. இங்கு சீட்டாட்டம் மட்டுமின்றி கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி சூதாட்டம் என பல்வேறு வகையில் பணப்பரிமாற்றம் செய்யும் தலைமை இடமாக செயல்பட்டு வருகிறது
திருப்பூர் முக்கிய வி.ஐ.பி கள் தங்களது சொந்த பயன்பாட்டுக்காக பேட்மிட்டன் கிளப் அமைத்து காலையிலும் மாலையிலும் உடல் பயிற்சிக்காக முக்கிய நபர்கள் வந்து செல்கிறார்கள். இந்த சந்தா பணம் மட்டுமே போதாது என்று. பணம் ஈட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கில் இந்த கிளப்பை ஒப்பந்த அடிப்படையில் கொடுத்தேன். நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பணத்தை வைத்து சூதாட்டம் நடைபெறுகிறது . இது குறித்து நீதிமன்ற அனுமதி உள்ளது . பணத்தை மறைத்து வைத்து. டோக்கன்களை கண் துடைப்புக்காக வைத்து விளையாடுகிறோம் இதனை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று கூறுகிறார். இதனை நடத்தும பிஜு என்பவரோ ஒரு படி மேல் போய் இந்து முன்னணியின் முக்கிய பிரமுகர் ஒருவரின் பெயரைச் சொல்லி, தான் அவருக்கு வேண்டப்பட்டவர் என்றும் அவர் கம்பெனியை நான் நடத்தியவர் என்றும் .
இது அரசியல் செல்வாக்கான கிளப் என்றும் கூறுகிறார் . இதனை அங்குள்ள பொதுமக்கள் ஏன் இங்கு நடத்தி வருகிறீர்கள் என்று கேட்டால் இதற்கு நாங்கள் பல்லடம் காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலரிடம் ஒப்புதல் வாங்கிக் கொண்டுதான் நாங்கள் நடத்துகிறோம். உங்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது நாங்கள் மாத மாதம் ஒவ்வொரு துறையினருக்கும் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை கப்பம் கட்டு வருகிறோம்.
திருப்பூர் மாவட்டம் ஆளுங்க கட்சியினரை கவனித்து வருகிறோம் . பல்லடம் காவல் துறை ஒப்புதலுடன் நாங்கள் இந்த கிளப்பை நடத்தி வருகிறோம் .
இந்த கிளப் கடந்த 2022 அக்டோபர் மாதத்தில் பல்லடம் காவல்துறையால் சோதனை இடப்பட்டு 26 பேர் கைது செய்யப்பட்டு சில நாட்கள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இங்கு விளையாட வரும் உறுப்பினர்கள் சிலர் கூறுகையில் சீட்டாட்டத்துக்கு நெருக்கடி இல்லாத கடந்த காலங்களில் ஆட்டம் ஒன்றிற்கு நபர் ஒருவரிடம் 10 சதவீதம் மேஜை கட்டணமாக வசூலித்தனர் ஆனால் இப்பொழுது பரபரப்பான சட்ட விரோதத்தை கருத்தில் கொண்டு 15 சதவீதம் வரை மேஜை கட்டணமாக வசூலிக்கின்றனர். உதாரணத்திற்கு ஏழு பேர் விளையாடும் 21 சீட்டாட்டம் ரம்மியில் 3000 ரூபாய் ஆட்டத்தில் மேஜை கட்டணமாக 7×300=2100 வசூலிக்க வேண்டும். ஆனால் இவர்களோ 3000÷7=428.6 =13 சதவீதத்திலிருந்து 15 சதவீதம் வரை மேஜைக்கு வசூலிப்பதாக கூறுகின்றனர் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது என தெரிய வருகின்றதுசட்ட விரோத சிட்டாட்டம் கிளப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு சின்னக்கரை பகுதியில் உள்ள எலைட் கிளப்பில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 43 பேரை பல்லடம் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர் தொடர்ந்து அவர்களிடமிருந்து 5000 ரூபாய் பணம் மற்றும் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
செய்தியாளர். மு .மொ. திருப்பூர