by admin on | 2025-09-08 05:12 AM
*திண்டுக்கல்லில் இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு*
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாகதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு (JAAC) பொதுக்குழு கூட்டத்தில்வழக்கறிஞர் சேமநல நிதியினை 10 லட்சத்திலிருந்து உயர்த்தி 25 லட்சமாக தமிழக அரசு வழங்க வேண்டும், மத்திய மாநில அரசுகள் உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும் என்றும், நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிமன்ற பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.இந்தக் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி இன்று 8-ம் தேதி திங்கட்கிழமை *திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில்* ஈடுபடுவதாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.
செய்தியாளர் மோகன் கணேஷ் திண்டுக்கல்.