by admin on | 2025-09-07 06:44 PM
திண்டுக்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகை, ரூ.60 ஆயிரம் பணம் கொள்ளை அடித்த வழக்கில் வாலிபர் கைது.
திண்டுக்கல், பாரதிபுரம், KMS- நகரை சேர்ந்த சேனாதிபதி மனைவி தனலட்சுமி(65) இவரது வீட்டின் பூட்டை கடந்த 5-ம் தேதி மர்ம நபர் உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து 8 பவுன் தங்க நகை, ரூ.60 பணம் கொள்ளையடித்து சென்றது தொடர்பாக தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதுகுறித்து S.P.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் DSP. கார்த்திக் மேற்பார்வையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் பிரபாகரன், முனியம்மாள் நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜார்ஜ், காவலர்கள் ராதாகிருஷ்ணன், முகமது அலி, சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட இன்பெண்ட்ராஜ்(30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 8 பவுன் தங்க நகை, ரூ.60 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
நிருபர் மாரிமுத்து திண்டுக்கல்.