| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

காவலர் தினம் மலர் வளையம் வைத்து மரியாதை...!!!

by admin on | 2025-09-07 06:38 AM

Share:


காவலர் தினம் மலர் வளையம் வைத்து மரியாதை...!!!

 திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில்  நேற்று அரசால் அறிவிக்கப்பட்ட *செப்டம்பர் 06* காவலர் தின விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காவல்துறையில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு, காவலர் தினத்தை முன்னிட்டு ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஊன்றினார்கள். மேலும் கலை நிகழ்ச்சிகளும், காவலர் தின உறுதிமொழிகளும், போட்டிகளும் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற காவலர்கள் மற்றும் காவலர்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


காவலர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் நிலைய ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலக அமைச்சு பணியாளர்கள் ஆகியோர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள். மேலும் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் ஆயுதப்படை காவலர்களின் ஆயுத தளவாடங்கள் பள்ளி மாணவர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு அவற்றின் செயல் திறன் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


நிருபர் மாரிமுத்து திண்டுக்கல்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment