| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

தி.மு.க.விலிருந்து விலகி...! அ.தி.மு.க.வில் இணைந்த முக்கிய நிர்வாகிகள்..! திடீர் திருப்பம்...!

by Vignesh Perumal on | 2025-09-06 02:06 PM

Share:


தி.மு.க.விலிருந்து விலகி...! அ.தி.மு.க.வில் இணைந்த முக்கிய நிர்வாகிகள்..! திடீர் திருப்பம்...!

திண்டுக்கல் மாவட்டம், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி, முன்னாள் துணைத் தலைவர் ஆர்.முருகேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெயகணேஷ் உட்பட தி.மு.க.வின் பல்வேறு முக்கிய நிர்வாகிகள், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளை வகித்திருந்த பலரும், ஒன்றியச் செயலாளர்கள் ராஜசேகரன் மற்றும் தர்மராஜ் ஏற்பாட்டில், திண்டுக்கல் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

அதாவது, ஆர்.முருகேசன் - செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி, முன்னாள் துணைத் தலைவர்,

ஜெயகணேஷ் - முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், சுப்பிரமணி - கள்ளிப்பட்டி முன்னாள் ஊராட்சி வார்டு உறுப்பினர், நாகராஜ் - திண்டுக்கல் மாநகராட்சி 16-வது வார்டு பிரதிநிதி ஆகியோர். இவர்களுடன் மேலும் பல நிர்வாகிகளும் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தி.மு.க.விலிருந்து விலகி வந்த அனைத்து நிர்வாகிகளும் சால்வை அணிவிக்கப்பட்டு, அ.தி.மு.க.வில் வரவேற்கப்பட்டனர். இந்த நிகழ்வு, திண்டுக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க.வின் செல்வாக்கைப் பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





ஆசிரியர்கள் குழு......

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment