| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் ADMK

அ.தி.மு.க.வின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும்...! முக்கிய பிரமுகர்கள் நீக்கம்..!

by Vignesh Perumal on | 2025-09-06 12:56 PM

Share:


அ.தி.மு.க.வின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும்...! முக்கிய பிரமுகர்கள் நீக்கம்..!

அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து, நேற்று இவருடன் கூட்டத்தில் பங்கேற்ற சில முக்கிய ஆதரவாளர்களின் கட்சிப் பொறுப்புகளும் பறிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோரை இணைத்தால் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற முடியும். இது குறித்து நாங்கள் ஆறு பேர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினோம். ஆனால், அவர் அதை ஏற்கவில்லை" என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடியாகவே, அ.தி.மு.க. தலைமை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

செங்கோட்டையன் நீக்கத்தைத் தொடர்ந்து, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பின்வரும் முக்கிய நிர்வாகிகளின் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன.


அதாவது, தம்பி (எ) K.A. சுப்பிரமணியன் - நம்பியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர், 

M. ஈஸ்வரமூர்த்தி (எ) சென்னை மணி - நம்பியூர் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்,

N.D. குறிஞ்சிநாதன் - கோபிசெட்டிப்பாளையம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்,

M. தேவராஜ் - அந்தியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர், 

S.S. ரமேஷ் - அத்தாணி பேரூராட்சிக் கழகச் செயலாளர், 

வேலு (எ) தா. மருதமுத்து - அத்தாணி பேரூராட்சி துணைச் செயலாளர், K.S. மோகன்குமார் - ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் ஆகிய முக்கிய பிரமுகர்கள் அனைவரும் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாகக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.


பதவி நீக்கம் குறித்து செங்கோட்டையன் கருத்து தெரிவிக்கும்போது, "தர்மம் வெல்ல வேண்டும். கட்சிப் பதவியை பறித்ததற்கு என்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன்," என்று கூறியுள்ளார். இது அ.தி.மு.க.வில் மேலும் ஒரு பிளவை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.





ஆசிரியர்கள் குழு.....

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment