by Vignesh Perumal on | 2025-09-04 03:47 PM
2025-ஆம் ஆண்டுக்கான தேசிய நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் (NIRF), சென்னை ஐஐடி ஒட்டுமொத்தப் பிரிவில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேசிய நிறுவனத் தரவரிசை கட்டமைப்பை (NIRF) வெளியிடுகிறது. கற்பித்தல், கற்றல், ஆராய்ச்சி, தொழில்முறை நடைமுறைகள், பட்டமளிப்பு, வெளிப்பாடு மற்றும் உள்ளடக்கம் போன்ற பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் இந்தத் தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில், சென்னை ஐஐடி ஒட்டுமொத்தப் பிரிவில் முதலிடத்தைப் பிடித்து தனது சிறப்பை மீண்டும் நிரூபித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை ஐஐடி இந்தப் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
அதாவது இந்த ஆண்டின் முதல் நான்கு இடங்களுக்கு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னை ஐஐடி (IIT Madras), பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் (IISc Bangalore), மும்பை ஐஐடி (IIT Bombay), டெல்லி ஐஐடி (IIT Delhi) என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தரவரிசை, நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்ய உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்