by admin on | 2025-09-04 09:37 AM
பெயரளவில் நடவடிக்கை எடுத்த நத்தம் போலீசார்*
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்பதை விஸ்வரூபம் எடுத்து படுஜோராக விற்பனை செய்யப்படுவதாகவும். இது காவல்துறையினரின் ஆசிர்வாதத்தோடு நடைபெறுவதாகவும்கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பனை செய்யப்படுவதாகவும் சமூக வலைதளத்தில் வீடியோவுடன் வெளியானதை தொடர்ந்து
மாவட்ட எஸ்பி பிரதீப் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து நத்தம் போலீசார் நத்தம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக ஆண்டிச்சாமி மகன் ராஜேஷ்(32) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
வீடியோவில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நிலையில் ஒருவர் மற்றும் கண்துடைப்புக்காக பெயரளவில் கைது செய்திருப்பது மாவட்ட கண்காணிப்பாளரை ஏமாற்றும் விதமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்
படம் செய்தி .மோகன் கணேஷ் திண்டுக்கல்.