| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

5.200 கிலோ கஞ்சா, 8 கிலோ குட்கா பறிமுதல்....! பகீர் ரிப்போர்ட்...!

by Vignesh Perumal on | 2025-09-03 08:55 PM

Share:


5.200 கிலோ கஞ்சா, 8 கிலோ குட்கா பறிமுதல்....! பகீர் ரிப்போர்ட்...!

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 5.200 கிலோ கஞ்சா, 8 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த ஹவுராவிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் சோதனை மேற்கொண்ட போது,

முன்பதிவில்லா பெட்டியில் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று இருந்த பைகளை சோதனை செய்தபோது அதில் 5.200 கிலோ கஞ்சா, 8 கிலோ குட்கா கடத்திவரப்பட்டது தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் அதனை பறிமுதல் செய்து அருகில் இருந்த பயணிகளிடம் விசாரணை செய்த போது அந்தப் பைகள் யாருடையது என்று தெரியவில்லை என தெரிவித்தனர். மேலும் இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்







நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment