by Vignesh Perumal on | 2025-09-03 07:09 PM
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில், தலைமை ஆசிரியர் வகுப்பறையில் நாற்காலியில் அமர்ந்திருக்க, சில மாணவர்கள் அவரது கால்களை மசாஜ் செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள அரசு பள்ளியில்தான் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைரலான காணொலியில், தலைமை ஆசிரியர் வகுப்பறையில் மேஜையில் உறங்கிக்கொண்டிருக்கிறார். இரண்டு மாணவர்கள் அவரது கால்களை மசாஜ் செய்கின்றனர். மேலும், மற்றொரு மாணவர் அவரது கையை மசாஜ் செய்கிறார். மற்ற மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (Chief Educational Officer) உத்தரவிட்டார். விசாரணையில், தலைமை ஆசிரியர் தருமபுரி அருகேயுள்ள வேறு ஒரு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பள்ளியில் ஆசிரியர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி மாணவர்களை இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது என கல்வித் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.
ஆசிரியர்கள் குழு.....