by Vignesh Perumal on | 2025-09-03 02:18 PM
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அண்ணா நகர் பகுதியில் உலா வந்த காட்டு மாடு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டு செல்லும் முக்கியச் சாலையில் அமைந்துள்ள அண்ணா நகர் பகுதி, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்புப் பகுதி. நேற்று இரவு, ஒரு காட்டு மாடு இந்தப் பகுதிக்குள் நுழைந்து சாலையோரம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் உலா வந்துள்ளது.
மாட்டின் சத்தம் கேட்டதும், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்துள்ளனர். காட்டு மாடு குடியிருப்புப் பகுதிக்குள் உலா வந்ததால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காட்டு மாட்டை விரட்டியடித்துள்ளனர்.
கொடைக்கானல் மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் அவ்வப்போது காட்டு மாடுகள் குடியிருப்புப் பகுதிக்குள் வருவது வழக்கமாகியுள்ளது. இதனால், வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக, இரவு நேரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்