by Vignesh Perumal on | 2025-09-03 12:46 PM
ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோரை ஒருங்கிணைக்க மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் திட்டமிட்டு வருவதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன.
கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கே.ஏ.செங்கோட்டையன், கடந்த சில நாட்களுக்கு முன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது, “பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகளை மீண்டும் ஒன்றுசேர்த்து, கட்சியை பலப்படுத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோருடன் செங்கோட்டையன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து அவர் பேசி வருவதாகவும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. மேலும் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆசிரியர்கள் குழு....