by admin on | 2025-09-02 06:59 PM
*அதிரடி உத்தரவிட்ட பழனி துணை கண்காணிப்பாளர் தனஜெயன்*
குற்ற சம்பவங்கள் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க காவல் துறையால் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவை எங்கள் ஏரியாவுக்குள் கண்காணிப்பு கேமரா வைப்பதற்கு யார் அனுமதி தந்த என்று கேமராவை உடைத்த பாலமுருகனை அலேக்கா தூக்கிய பழனி காவல்துறை*
திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் துணை கண்காணிப்பாளர் தனஜெயன் காவல் ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் அதிரடி உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் விஜய் அவர்கள் பழனி சாமி தியேட்டர் அருகே எந்த ஒரு அசம்பாவிதங்களும் குட்ட சம்பவங்களை தடுப்பதற்காக கண்காணிப்பு கேமரா காவல்துறையால் வைக்கப்பட்டிருந்தது. சாமி தியேட்டர் அருகே உள்ள பாலமுருகன் என்ற நபர் சிசிடிவி கேமராவை உடைத்து சேதப்படுத்தி உள்ளார். சிசிடிவி கேமரா பொருத்தும் வேலை செய்து வரும் ஊர்க்காவல் படையை சேர்ந்த சக்திவேல் என்பவர் எதற்காக சிசிடிவி கேமராவை உடைத்தாய் என்று கேட்டதற்கு தவறான வார்த்தைகளும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்பு சக்திவேல் பழனி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதன் அடிப்படையில் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைத்தனர்.
நிருபர். பாலாஜி பழனி.