| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

தமிழ்நாட்டில் முதல்முறையாக வ.உ.சிதம்பரனார் நினைவு நாளில் குருபூஜை விழா

by aadhavan on | 2025-09-01 06:45 PM

Share:


தமிழ்நாட்டில் முதல்முறையாக வ.உ.சிதம்பரனார் நினைவு நாளில் குருபூஜை விழா

மதுரையில் எய்ம்பா அமைப்பினர் நடத்திய கூட்டத்தில், மாவட்டத் தலைவர் ராமச்சந்திர குமார் பேசியபோது எடுத்த படம்.

» மு.ஆதவன்

தமிழ்நாட்டில் முதல்முறையாக வ.உ.சிதம்பரனார் நினைவு நாள், குருபூஜை விழாவாகக் கொண்டாடப்பட உள்ளதாக, எய்ம்பா (AIMPA) அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்ட அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் அமைப்பின் (AIMPA) கூட்டம் மதுரையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ராமச்சந்திர குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம் வரவேற்றார். துணைத் தலைவர் பாக்கியநாதன், இணைச் செயலாளர் குமரவேல் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் கூறினர். 

கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் நினைவு நாளான நவம்பர் 18 அன்று, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் பிரம்மாண்டமான மாநாடுடன், குருபூஜை விழாவாக கொண்டாடப்பட உள்ளதாக தெரிவித்தனர். எய்ம்பா மாநிலத்தலைவர் ஓம்சக்தி ராமச்சந்திரன் தலைமையில், மதுரையில் இருந்து, வ.உ.சி, பிறந்த ஊருக்கு ஜோதி ஊர்வலம் செல்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், சுதேசி என்ற சொல்லுக்கு செயல் வடிவம் தந்த தேசியத்தலைவர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் விழாவை, செப்டம்பர் 5ஆம் தேதி மதுரையில் சிறப்பாகக் கொண்டாடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.

மதுரை மாநகர் வார்டுகளில் நிர்வாகிகளை நியமிப்பது, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, மகளிர் அணி அமைப்பைப் பலப்படுத்து குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடைவடைந்த பெண்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து அவர்களை தொழில் முனைவோர் ஆக்குவதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொருளாளர் ஞானசேகரன் நன்றி தெரிவித்தார்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment