| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

பட்டா கத்தியுடன் இருவர் கைது...!!!!

by admin on | 2025-08-31 01:30 PM

Share:


பட்டா கத்தியுடன் இருவர் கைது...!!!!

*தாடிக்கொம்பு அருகே பட்டாக்கத்தியுடன் வழிப்பறி செய்ய சதித்திட்டம் தீட்டிய 2 பேர் கைது*


திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அகரம், கருங்கல்பட்டி கல்லறை அருகே சந்தேகத்திற்கு இடமாக கையில் பட்டாகத்தியுடன் நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தனர் போலீசார் சுற்றி வளைத்ததும் பட்டாகத்தியை காட்டி போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் அகரம், அச்சாம்பட்டியை சேர்ந்த சூர்யா(33), கார்த்திக்(29) என்றும் சாலையில் செல்பவர்களை பட்டாகத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


படம் செய்தி. மோகன் கணேஷ் திண்டுக்கல்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment