| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

கோலாகலமாக நடந்த ஊர்வலம்...! நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு...!

by Vignesh Perumal on | 2025-08-30 04:21 PM

Share:


கோலாகலமாக நடந்த ஊர்வலம்...! நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு...!

தேனி அல்லிநகரில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் பிரமாண்டமான விநாயகர் ஊர்வலம் இன்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் தலையில் விநாயகர் சிலைகளையும், முளைப்பாரிகளையும் சுமந்து சென்றது ஆன்மிகச் சூழலை மேலும் அதிகரித்தது.

பொம்மையகவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், கோலாகலமாக இருந்தது.

சுவாமி ஞான சிவானந்தா, சுவாமி சிவமயானந்தா ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.

வழக்கறிஞர் செல்வபாண்டி, பஸ் உரிமையாளர் ரத்தினம், பாரதீய பார்வர்டு பிளாக் மாநில அமைப்புச் செயலாளர் MPS முருகன், வெளிச்சம் அறக்கட்டளைத் தலைவர் நாணயம் சிதம்பரம் உட்படப் பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்று ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தனர்.

இந்த ஊர்வலத்தில், ஒரு இயந்திர யானை முன்னால் செல்ல, அதன் பின்னால் சுமார் 150-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் ஒரு அடி உயர விநாயகர் சிலைகளைத் தட்டில் வைத்துத் தலையில் சுமந்து சென்றனர். மேலும், 200-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் முளைப்பாரிகளைச் சுமந்தபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர். மொத்தம் 300 விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் இடம்பெற்றன.

தேவராட்டம், கோலாட்டம், கொம்பு முழக்கம், தப்புக்கொட்டு, செண்டை மேளம் போன்ற பல்வேறு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும், சிவன்-பார்வதி ஆட்டம், பஞ்சபாண்டவர் ஆட்டம் போன்றவையும் ஊர்வலத்தைச் சிறப்பித்தன.

இந்த ஊர்வலம் நேரு ரவுண்டானா, பங்களாமேடு, அரண்மனைப்புதூர் வழியாகச் சென்று, இறுதியில் முல்லைப் பெரியாற்றில் விநாயகர் சிலைகள் விஸர்ஜனம் செய்யப்பட்டன.


ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை தேனி நகர இந்து எழுச்சி முன்னணியினர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில், தேனியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.



இணை ஆசிரியர் - சதீஷ்குமார்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment