by Vignesh Perumal on | 2025-08-27 01:15 PM
திண்டுக்கல் குடைபாறைப்பட்டி பகுதியில், போலீசாரின் தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் குடைபாறைப்பட்டி பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த இந்து முன்னணி அமைப்பினர் திட்டமிட்டனர். இந்த ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததாகத் தெரிகிறது. அனுமதி மறுக்கப்பட்டபோதிலும், இந்து முன்னணியினர் இன்று சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்றனர்.
தகவல் அறிந்த திண்டுக்கல் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தினர். ஆனால், இந்து முன்னணியினர் போலீசாரின் தடையை மீறி ஊர்வலத்தைத் தொடர முயன்றதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஊர்வலம் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தியதால், போலீசார் உடனடியாக விநாயகர் சிலையை வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்தனர். மேலும், தடையை மீறிச் செயல்பட்ட இந்து முன்னணி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் போலீசார் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்