by Vignesh Perumal on | 2025-08-24 11:33 AM
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே, 78 வயது மூதாட்டியை வீடு புகுந்து பாலியல் துன்புறுத்தல் செய்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கிராமம் ஒன்றில் 78 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். நேற்று இரவு, அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஒரு இளைஞர், அந்த மூதாட்டியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். மூதாட்டி கூச்சலிட்டதை அடுத்து, அக்கம்பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
அவர்களைக் கண்டதும் அந்த இளைஞன் தப்பியோட முயன்றான். ஆனால், பொதுமக்கள் அவனைப் பிடித்து, காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த இளைஞனைக் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவன் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் (22) என்பது தெரியவந்தது. அவன் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிந்து வந்தான்.
சஞ்சய் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்