| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகா தேவி மறைவு, ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு...! முதல்வர்....!

by Vignesh Perumal on | 2025-08-19 08:57 PM

Share:


டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகா தேவி மறைவு, ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு...! முதல்வர்....!

திமுக பொருளாளரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான டி.ஆர். பாலுவின் மனைவி திருமதி. ரேணுகா தேவி அவர்களின் மறைவுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர், ரேணுகா தேவியின் மறைவை ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "கழகப் பொருளாளரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், என் ஆருயிர் நண்பருமான திரு. டி.ஆர். பாலு அவர்களின் மனைவி திருமிகு. ரேணுகா தேவி பாலு அவர்களது மறைவால் வேதனையடைந்தேன். நண்பர் டி.ஆர். பாலு அவர்களும், தம்பி டி.ஆர்.பி. ராஜா அவர்களும் பொதுவாழ்வில் பயணித்திட அன்பை வழங்கித் துணை நின்ற அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு! எனது நண்பருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்து, அவர்களது கரம் பற்றி ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

ரேணுகா தேவியின் மறைவு, திமுகவினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரேணுகா தேவி, சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன.

முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் டி.ஆர். பாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






செய்தி - மோகன் கணேஷ் திண்டுக்கல்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment