| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

பேனர்கள் அகற்றம்...! தொண்டர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்....!

by Vignesh Perumal on | 2025-08-19 01:13 PM

Share:


பேனர்கள் அகற்றம்...! தொண்டர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்....!

திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் பகுதிகளில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டதாகக் கூறி, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விரைவில் திருச்சிக்கு வரவிருக்கிறார். இதனையொட்டி, ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் பகுதிகளில் அதிமுகவினர் அவருக்கு வரவேற்பு அளிப்பதற்காகப் பல்வேறு இடங்களில் பேனர்களை வைத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை அந்தப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்கள் அகற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. மற்ற அரசியல் கட்சிகளின் பேனர்கள் அகற்றப்படாத நிலையில், அதிமுக பேனர்கள் மட்டும் குறிவைத்து அகற்றப்பட்டதாக அதிமுகவினர் குற்றம்சாட்டினர்.

பேனர்கள் அகற்றப்பட்டதைக் கண்டித்து, ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காவல்துறையின் பாரபட்சமான நடவடிக்கையைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததையடுத்து, அதிமுகவினர் போராட்டத்தைக் கைவிட்டனர்.






நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment