| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

பிரதான சாலையில்..! ஆக்கிரமிப்புகள் அகற்றம்...! மக்கள் வரவேற்பு...!

by Vignesh Perumal on | 2025-08-19 01:03 PM

Share:


பிரதான சாலையில்..! ஆக்கிரமிப்புகள் அகற்றம்...! மக்கள் வரவேற்பு...!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றிவருகின்றனர்.

வத்தலகுண்டு நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்த நிலையில், அதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. காளியம்மன் கோயில் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், கடைகள் மற்றும் குடியிருப்புகளால் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இதனால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் சிரமங்களைச் சந்தித்து வந்தனர்.


இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை சார்பில் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கடைகள், கடைகளின் நீட்டிக்கப்பட்ட பகுதிகள், பதாகைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.






செய்தி - மோகன் கணேஷ் திண்டுக்கல்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment