by Vignesh Perumal on | 2025-08-18 10:37 AM
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 18) முதல் தொடங்கியுள்ளது. நவம்பர் 1-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளிக்கு, 15 நாட்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்ய முடியும் என்பதால், இன்று முதல் டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்று, அக்டோபர் 17-ஆம் தேதி பயணத்திற்கான ரயில் டிக்கெட்டுகளைப் பயணிகள் முன்பதிவு செய்யலாம். நாளை, அக்டோபர் 18-ஆம் தேதி முதல் அக்டோபர் 27-ஆம் தேதி வரையிலான பயணங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
பெரும்பாலான பயணிகள் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு பயணிக்கத் திட்டமிடுவார்கள் என்பதால், இந்தத் தேதிகளில் முன்பதிவு கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகள் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (IRCTC) இணையதளம் அல்லது அதன் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மேலும், ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களிலும் டிக்கெட்டுகளைப் பதிவு செய்யலாம்.
தீபாவளிப் பண்டிகை காலத்தில், சென்னையில் இருந்து தென் தமிழகம் மற்றும் பிற முக்கிய நகரங்களுக்குச் செல்லும் ரயில்களில் டிக்கெட்டுகள் மிக விரைவாக விற்றுத் தீர்ந்துவிடும். எனவே, பயணத் திட்டமிடுவோர் உடனடியாக முன்பதிவு செய்வது அவசியம்.
பண்டிகைக் காலங்களில் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்