| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

மகனைக் கொன்ற தாய்...! ஊரையே சோகத்தில் ஆழ்த்தியது....! பெரும் பரபரப்பு...!

by Vignesh Perumal on | 2025-08-18 10:05 AM

Share:


மகனைக் கொன்ற தாய்...! ஊரையே சோகத்தில் ஆழ்த்தியது....! பெரும் பரபரப்பு...!

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள காவடிக்காரனூர் பகுதியில், மதுபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்ட மகனை, ஆத்திரமடைந்த தாய் மண்வெட்டி கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவடிக்காரனூரைச் சேர்ந்த முத்துச்சாமி (49), தனது தாய் காளியம்மாள் (65) உடன் வசித்து வந்தார். முத்துச்சாமிக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவர் தினந்தோறும் மது அருந்திவிட்டு, தனது தாயிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் காளியம்மாள் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

நேற்று இரவு, முத்துச்சாமி வழக்கம் போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்து, காளியம்மாளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த காளியம்மாள் வீட்டிற்குள் இருந்த மண்வெட்டி கட்டையை எடுத்து முத்துச்சாமியின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த முத்துச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துச்சாமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முத்துச்சாமியின் தாயார் காளியம்மாளைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் மகன் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததால், பொறுமையிழந்த தாய் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளதை முதற்கட்ட விசாரணையில் போலீசார் உறுதி செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.






ஆசிரியர்கள் குழு......

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment