by admin on | 2025-08-17 10:23 AM
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பழனி பெரியநாயகி அம்மன் கோயில் திடலில் கோபூஜையுன் தொடங்கி கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர், கலந்து கொண்ட குழந்தைகள் அனைவருக்கும் தண்ணீர் பாட்டில், சான்றிதழ், இனிப்பு கார வகைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் பரத நாட்டியம், ஆப்ரேஷன் சித்தூர், தேசத்தை பற்றியெல்லாம் சிறப்பாக பேசி தங்கள் தனித்திறமையை வெளிகாட்டினர், அவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் RSS, பா.ஜ.க, ஹிந்து முன்னணி, ஹிந்து வியாபாரிகள் சங்கம், என அனைத்து இந்து அமைப்பு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்,
பழனி ஆதினம் ஸ்ரீமத். புலிப்பாணி சுவாமிகள் ஆசியுரை வழங்கினார், இறுதியாக அனைவரின் முன்னிலையில் குலுக்கல் முறையில் பழனியின் அதிர்ஷ்ட கிருஷ்ணர் மற்றும் அதிர்ஷ்ட ராதை தேர்ந்தெடுக்கப்பட்டனர் அவர்களுக்கு பழனி கன்பத் கிரேன்ட் உரிமையாளர் ஸ்ரீ ஹரிகரமுத்து ஐயா அவர்களும் திரு ஆவின் குடி கந்த விலாஸ் உரிமையாளர் ஸ்ரீ பாஸ்கரன் அவர்களும் அதிர்ஷ்ட கிருஷ்ணர் மற்றும் அதிர்ஷ்ட ராதை இருவருக்கும் தலா 10,001 பரிசு வழங்கினார்கள், இதில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில, மாவட்ட, நகர், ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நிருபர்கள் பாலாஜி / கதிரேசன் பழனி.