by admin on | 2025-08-17 09:33 AM
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டுக்கு வந்த அதிமுக "முன்னாள் எம்எல்ஏ"!
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர் வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு புகாரில் சட்ட விரோத பண பரிமாற்ற விவகாரத்தில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்பட்டது.சோதனை நடைபெறும் தகவலை கேட்டதும் ஏராளமான திமுகவினர் அமைச்சர் வீட்டு முன்பு குவிந்தனர்.
இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் அதிமுக முன்னாள் MLA சுப்புரத்தினம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பழனி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரான அவர் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.