by admin on | 2025-08-16 06:53 PM
போலி ஆவணங்கள் மூலம் மண் குவாரி அமைக்க முயற்சி கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா..???
தேனி மாவட்டம், கம்பம் தாலுகா, உத்தமபாளையம் கிராமத்தில் சர்வே எண்.1031/1A A.முருகன் S/o.கணபதிஎன்ற பெயரில் மண் குவாரி அமைப்பதற்கான போலியான ஆவணங்களை தயார் செய்து Sciaa கமிட்டியில் அனுமதி வாங்கப்பட்டு புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் அனுமதிக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த கோப்பில் உள்ள மண் பரிசோதனை சான்று மற்றும் ஆவணங்கள் போலியாக தயார் செய்து வைத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர்.
ஆனால் சர்வே எண்.1031/1A கடந்த 22.02.2024- அன்று திருட்டுதனமாக மண் எடுக்கப்பட்டு கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் தலைமையில் 8 டிப்பர் லாரி 2 பொக்லைன் இயந்திரங்களை பறிமுதல் செய்து 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதில் செந்தில்குமார் என்பவர் முதல் குற்றவாளி இப்பொழுது சர்வே இடத்தில் செந்தில்குமார் பெயரில் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக தேனி புவியியல் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அவர்களுக்கு புகார் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே மண் அல்லப்பட்டு இருக்கும் இடத்திற்கு காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கும் சூழலில் அந்த இடத்திற்கு மண் குவாரி அமைக்க அனுமதி வழங்குவது புவியியல் மற்றும் சுரங்கத் துறை விதிகளுக்கு புறம்பானதாக உள்ளது.இது தொடர்பாக பலமுறை புவியியல் மற்றும் சுரங்க துறைக்கு தபால் மூலமாக புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே தேனி கலெக்டர் ரஞ்சித் சிங் அவர்கள் உடனடியாக நேரில் சென்று புலதணிக்கை செய்து கனிம வளம் மற்றும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
தி.முத்துக்காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர்.9842337244