| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் DMK

தொண்டர்கள் தர்ணா போராட்டம்...! பெரும் பரபரப்பு...!

by Vignesh Perumal on | 2025-08-16 02:11 PM

Share:


தொண்டர்கள் தர்ணா போராட்டம்...! பெரும் பரபரப்பு...!

திண்டுக்கல் துரைராஜ் நகரில் உள்ள தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களின் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லத்தின் முன்பு திரண்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அமலாக்கத்துறையின் சோதனையைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் அரசியல் காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மத்திய அரசு பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த சோதனையை நடத்துவதாகக் கூறி, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர் இல்லத்திற்குள் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், வீட்டைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.

அமைச்சர் ஐ. பெரியசாமி மீதான நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகள் இந்திரா மற்றும் திண்டுக்கல் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

திமுகவினரின் இந்த தர்ணா போராட்டம், இந்த விவகாரத்தை மேலும் அரசியல்மயமாக்கியுள்ளது. இந்த சோதனைகள் குறித்த அடுத்தகட்ட தகவல்கள் அமலாக்கத்துறை சோதனையின் முடிவிலேயே தெரியவரும்.







செய்தி - மோகன் கணேஷ் திண்டுக்கல்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment