| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

238 அரசு பணியாளர்கள்...! கலெக்டருக்கு சிறப்பு வரவேற்பு...! பெரும் மகிழ்ச்சி...!

by Vignesh Perumal on | 2025-08-16 10:41 AM

Share:


238 அரசு பணியாளர்கள்...! கலெக்டருக்கு சிறப்பு வரவேற்பு...! பெரும் மகிழ்ச்சி...!

இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் திரு. ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

காலை 9:00 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் திரு. ரஞ்ஜீத்சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பை ஆய்வு செய்து மரியாதை ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

விழாவின் முக்கிய அங்கமாக, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சிறப்பாகப் பணியாற்றிய 16 தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன. மேலும், காவல்துறை, நீதித்துறை, வருவாய், சுகாதாரம், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 238 அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்த விழாவில், அரசின் பல்வேறு துறைகள் மூலம் மொத்தம் 47 பயனாளிகளுக்கு ₹67.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு ₹1.92 லட்சம் மதிப்பிலான நவீன செயற்கை காலும், மற்றொருவருக்கு ₹6,359 மதிப்பிலான தையல் இயந்திரமும் வழங்கப்பட்டது.


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒருவருக்கு ₹50,000 தொழிற்கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ₹3.10 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளைக் கட்டுவதற்கான ஆணைகள் 5 நபர்களுக்கு வழங்கப்பட்டன.

தாட்கோ மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் சுய தொழில் தொடங்குவதற்காக தாட்கோ சார்பில் 3 பேருக்கு தலா ₹1 லட்சம் வீதமும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 3 பேருக்கு ₹16.50 லட்சம் வரையிலும் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 நபர்களுக்கு தலா ₹6,700 மதிப்பிலான தேய்ப்புப் பெட்டிகள் வழங்கப்பட்டன.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2 நபர்களுக்கு தலா ₹6,600 மதிப்பிலான தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ₹1.61 லட்சம் மதிப்பிலான பணி ஆணையும், பவர் டில்லர் இயந்திரம் வாங்க ₹2.26 லட்சம் மதிப்பிலான மானியமும் வழங்கப்பட்டது.

கூட்டுறவுத்துறை சார்பில் 2 சுய உதவிக் குழுக்களுக்கு ₹13.25 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. சத்துணவுத் துறை சார்பில் 2 பேருக்கு சத்துணவு அமைப்பாளர் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தொழிலாளர் நலத்துறை மற்றும் மகளிர் திட்டம் சார்பில் 11 பேருக்கு ₹1.14 லட்சம் கல்வி உதவித்தொகையும், 7 நபர்களுக்கு ₹10.50 லட்சம் சமுதாய முதலீட்டு நிதியும் வழங்கப்பட்டன.

சுதந்திர தின விழாவிற்கு மேலும் மெருகூட்டும் வகையில், 5 பள்ளிகளைச் சேர்ந்த 370-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கண்கவர் கலைநிகழ்ச்சிகளை வழங்கினர். மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டு, அதில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.


இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. சினேஹா பிரியா, இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. ஐமகாலட்சுமி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்..





நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment