by Vignesh Perumal on | 2025-08-15 01:27 PM
இந்திய நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளார். மேலும், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் ₹20,000-ல் இருந்து ₹22,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தியாகிகளின் குடும்பங்களுக்கான ஓய்வூதியம் ₹10,000-ல் இருந்து ₹12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் போன்ற தியாகிகளின் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ₹11,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதி உதவி ₹15,000 ஆகவும், அவர்களின் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ₹8,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புகள் அனைத்தும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, விடுதலைக்காகப் போராடிய தியாகிகளையும், அவர்களின் குடும்பங்களையும் கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஆசிரியர்கள் குழு....