by admin on | 2025-08-15 10:51 AM
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கு ஒரு சில காவல்துறை அதிகாரிகள் காரணம் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன்*
திண்டுக்கல்லில் 24-ம் தேதி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக நடைபெறும் சமூக சமத்துவ மாநாடு அழைப்பிதழ் வழங்குவதற்காக கொடைரோடு அருகே இந்திரா நகருக்கு வந்திருந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன்
செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழ்நாட்டில் ஆணவக் கொலை நடக்கக் கூடாது, ஆணவ கொலைக்கு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சீர்குலைந்ததற்கு காரணம் ஒரு சில காவல் அதிகாரிகளே, திட்டமிட்டு சில தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது அதனை அரசு கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தி.முத்துக்காமாட்சி, எவிடன்ஸ் வெளியீட்டாளர். 9842337244