| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது...! நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

by Vignesh Perumal on | 2025-08-14 12:46 PM

Share:


எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது...! நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முறையீடு செய்துள்ளனர். அப்போது, தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும், ஒரு சட்டக்கல்லூரி மாணவர் காணாமல் போனதாகவும் புகார் தெரிவித்தனர்.

இந்த முறையீட்டை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு, இது தொடர்பாக முறையான மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகல் விசாரிப்பதாகத் தெரிவித்தது. அதே சமயம், தலைமை நீதிபதி அமர்விலும் இந்த விவகாரம் முறையிடப்பட்டது.

அப்போது நீதிபதிகள், "போராட்டம் நடத்த அனுமதி பெற்று நடத்தினால் எந்தத் தடையும் இல்லை. அவ்வாறு அனுமதி பெற்ற போராட்டத்தை காவல்துறையினர் தடுத்தால் நீதிமன்றம் தலையிட முடியும். ஆனால், தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் அனுமதி பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அதனால்தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. எந்த மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

போராட்டத்தின்போது, காவல்துறையினர் அத்துமீறி செயல்பட்டதாகவும், வழக்கறிஞர்கள் மற்றும் ஒரு சட்டக்கல்லூரி மாணவர் காணாமல் போய்விட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்குப் பிறகு, இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து வழக்கறிஞர்கள் தரப்பு ஆலோசித்து வருகிறது.






ஆசிரியர்கள் குழு....

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment