by Vignesh Perumal on | 2025-08-14 10:12 AM
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளிடமிருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என, உதவி ஆணையாளர் சுரேஷ் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.
பாளையங்கோட்டை மத்திய சிறை, தென்மாவட்டங்களில் உள்ள முக்கிய குற்றவாளிகள் அடைக்கப்படும் ஒரு பெரிய சிறைச்சாலை ஆகும். இங்கு கைதிகளால் செல்போன் பயன்பாடு, போதைப்பொருள் கடத்தல், மற்றும் ஆயுதங்கள் பதுக்கி வைத்தல் போன்ற சட்டவிரோத செயல்கள் நடப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகார்களின் அடிப்படையில், திடீர் சோதனை நடத்தப்பட்டது.
சிரைவாசிகளின் அறைகள், பொதுவான பகுதிகள், சமையலறை என அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், சில செல்போன்கள், சிம்கார்டுகள், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள், மற்றும் சில கூர்மையான ஆயுதங்கள் இருக்கிறதா என்ற கோணத்தில் இந்த சோதனை நடைபெறுகிறது.
இந்த திடீர் சோதனை, சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்