by Vignesh Perumal on | 2026-04-24 03:05 PM
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு (HSC) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளைப் பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த முடிவுகள், மே மாதத்தில் இரு கட்டங்களாக வெளியாக உள்ளன.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வருகின்ற மே 8, 2026 (08.05.2026) அன்று வெளியிடப்படும். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வருகின்ற மே 20, 2026 (20.05.2026) அன்று வெளியிடப்படும்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது தேர்வு முடிவுகளைப் பள்ளி கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகியவற்றில் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவிட்டு அறிந்துகொள்ளலாம்.
மேலும், மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்களுக்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாகத் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜா (84) காலமானார்...!
சிங்கப்பண் சிறப்பு அதிரடிப்படை ! முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்து அதிரடி.!!
கஞ்சா பறிமுதல் நான்கு பேர் கைது....!!!
கிரிக்கெட் வீரர்...! நடிகர் சிவகார்த்திகேயன்...! குடும்பத்துடன் திடீர் விசிட்...!
கஞ்சா..! கணவன் மனைவி உட்பட 3 பேர் கைது...! அதிரடி நடவடிக்கை...!