by satheesh on | 2026-04-10 06:24 PM
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை - விரிவான விவரம். அரசு / அரசு உதவி பெறும் / தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 16 ஆம் தேதி நிறைவடைகின்றன. ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என அறிவிக்கப்படுகிறது. 2026-27ஆம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டில் ஜூன் 1 ஆம் தேதியான திங்கட்கிழமை முதல் அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. வரும் கல்வியாண்டு முதல் 1–3 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பாட நூல்கள் அறிமுகப்படுத்தப்படுவதால் இந்த வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை மாவட்ட அளவில் பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும் - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் (எய்ம்பா) சார்பில் மணமாலை ★ மதுரையில் மே.31 ல் நடக்கிறது
ADMK எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது தற்கொலைக்கு சமம்...!!! வழக்கறிஞர் பாண்டியராஜன்...
பொதுமக்கள் தங்களது குறைகள் - கோரிக்கைகளை தெரிவிக்க புதிய வாட்ஸ்அப் எண் வெளியீடு ! தேனி கலெக்டர் அறிவிப்பு !!
பெரியகுளத்தில் அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டிகள் - சென்னை இந்தியன் வங்கி அணி சாம்பியன்.!
அரசியல் வரலாற்றில் முதல் முறையாக...! சட்டமன்றத்தில்...! பொறுப்புகள்...!