| | | | | | | | | | | | | | | | | | |
கல்வி கல்வி

கல்வியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை..! 4 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் நிறுத்தம்..!

by Vignesh Perumal on | 2026-04-08 06:28 PM

Share:


கல்வியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை..! 4 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் நிறுத்தம்..!

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, 4 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் தொடர்பாகப் பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் (TNTEU) இணைவு பெற்றுள்ள கல்வியியல் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எஸ்சி., பி.எட். (B.Sc. B.Ed.) மற்றும் பி.ஏ., பி.எட். (B.A. B.Ed.) படிப்புகள் வரும் 2026-27 கல்வியாண்டு முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டு (2026-27) முதல் எந்தவொரு தனியார் அல்லது அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளும் இந்த 4 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளில் புதிய மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளக் கூடாது எனப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

ஒருவேளை பல்கலைக்கழகத்தின் இந்த உத்தரவை மீறி, கல்லூரிகள் மாணவர் சேர்க்கை நடத்தினால், அந்த மாணவர்களின் கல்விக்கோ அல்லது அவர்களின் பட்டயச் சான்றிதழ்களுக்கோ தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கையின் (NEP 2020) ஒரு பகுதியாக, பழைய ஒருங்கிணைந்த படிப்புகளுக்குப் பதிலாக ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்விக் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே பழைய நடைமுறையிலான 4 ஆண்டு படிப்புகள் நிறுத்தப்படுவதாகத் தெரிகிறது.

இந்த அறிவிப்பு வரும் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அவர்கள் தங்கள் படிப்பைத் தொடர்ந்து முடித்துப் பட்டம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பி.எட். படிக்க விரும்பும் மாணவர்கள், இந்தப் படிப்புகளில் சேரும் முன்பாக சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு அந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அனுமதி பல்கலைக்கழகத்திடம் இருந்து கிடைத்துள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தற்போது நடைமுறையில் உள்ள 2 ஆண்டு பி.எட். (B.Ed.) படிப்புகள் வழக்கம் போல் தொடரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.






நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment