by satheesh on | 2026-04-05 04:16 PM
புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் சிஎஸ்கே ரசிகர்கள் வழிபாடு :
இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனை* ஐபிஎல் 2026 சீசன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சிஎஸ்கே அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதனை அடுத்து இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டி சிஎஸ்கே அணி ரசிகர்கள்இன்று திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம் பட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் கோவிலில் அமைந்துள்ள சங்கிலி கருப்புவை வணங்கி பின்பு பாதாள செம்பு முருகனை தரிசனம் செய்தனர்.
இன்று நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் தொடர்ந்து சிஎஸ்கே அணி வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் மனம் உருகி பாதாள செம்பு முருகனை வணங்கி சென்றனர்.
சிஎஸ்கே அணி பேட்ஸ்மேன்களான ஆயுஸ் மாத்ரே , சஞ்சு சாம்சன், சிவம் தூபே ஆகியோர் சிறப்பாக விளையாட வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். சிஎஸ்கே அணி வீரர்கள் மகேந்திர சிங் தோனி ,நாதன் எல்லிஸ் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து விரைவில் அணிக்கு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.
இணை ஆசிரியர் :N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!