| | | | | | | | | | | | | | | | | | |
சினிமா General

எனது அன்புத் தம்பி...! அருமையான மனிதர்..! ரஜினிகாந்த் உருக்கமான இரங்கல்..!

by Vignesh Perumal on | 2026-02-15 11:12 AM

Share:


எனது அன்புத் தம்பி...! அருமையான மனிதர்..! ரஜினிகாந்த் உருக்கமான இரங்கல்..!

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான மறைந்த ஆர்.எம். வீரப்பனின் மகன் தமிழழகன் திடீரென காலமானார். அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தமிழழகனின் மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது: "மதிப்பிற்குரிய அமரர் ஆர்.எம். வீரப்பன் அவர்களின் புதல்வர், எனது அன்புத் தம்பி தமிழழகன் அருமையான மனிதர். அவரது திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

மறைந்த ஆர்.எம். வீரப்பன் அவர்கள் ரஜினிகாந்தின் திரையுலகப் பயணத்தில் மிக முக்கியமானவர். ரஜினிகாந்தின் பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்தவர் என்ற முறையில், அவர்களது குடும்பத்துடன் ரஜினிகாந்த் நீண்டகாலமாக நெருக்கமான நட்பைப் பேணி வருகிறார். அந்த வகையில், தமிழழகனை தனது சொந்தத் தம்பியாகவே கருதி ரஜினிகாந்த் இந்த உருக்கமான செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

தமிழழகனின் திடீர் மறைவு ஆர்.எம். வீரப்பன் குடும்பத்தினரிடையேயும், அவர்களைச் சார்ந்தவர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் தமிழழகனின் குணநலன்களைப் பாராட்டி, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் நேரில் சென்றும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தங்களது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.











நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment